திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (10:25 IST)

பயணத்துலயும் எவ்ளோ வேலை கெடக்கு! – வைரலாகும் பிரதமர் மோடியின் புகைப்படம்!

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி விமான பயணத்தின்போது கோப்புகளை படிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அங்குள்ள தொழிலதிபர்களையும், துணை அதிபர் கமலா ஹாரிஸையும் சந்திக்க உள்ளார். இதற்காக அமெரிக்கா சென்றுள்ள அவருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனிடையே விமானத்தில் செல்லும்போது கோப்புகளை சரிபார்க்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “ஒரு நீண்ட விமான பயணம் என்பது சில கோப்பு பணிகளை மேற்கொள்வதற்கான நல்ல சந்தர்ப்பமும் ஆகும்” என கூறியுள்ளார்.

இந்த ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்து பலர் பிரதமர் மோடியை புகழ்ந்து வருகின்றனர். நடிகை குஷ்பூ “உங்களது இந்த அயராத உழைப்பால்தான் மக்கள் உங்களை நம்புகிறார்கள்” என கூறியுள்ளார். அதேசமயம் பலர் இந்த படத்தை கிண்டல் செய்தும் பதிவிட்டு வருகின்றனர்.