1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (13:25 IST)

குரூப் கேப்டன் வருண் சிங் மரணம் - மோடி இரங்கல் ட்விட்!

ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி இரங்கல். 

 
கடந்த 8ம் தேதி குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் விமானப்படை கேப்டன் வருண்சிங் 80 சதவீதம் உடல் எரிந்த நிலையில் பெங்களூர் விமானப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
 
இந்நிலையில் தற்போது கேப்டன் வருண்சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேருமே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி கேப்டன் வருண் சிங் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது,  நாட்டிற்கு கேப்டன் வருண் சிங் ஆற்றிய சேவையை என்றும் மறக்க முடியாது. வருண் சிங் நாட்டிற்கு பெருமையுடனும், வீரத்துடனும் சேவை ஆற்றியுள்ளார். குரூப் கேப்டன் வருண் சிங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழந்த இரங்கல் என ட்வீட்.