Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண மதிப்பிழப்பு; மோடியை ஆதரிக்கும் மக்கள்: ஆய்வின் முடிவு!!

Written By Sugapriya Prakash
Updated: புதன், 8 நவம்பர் 2017 (15:55 IST)
பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டு இன்ரோடு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு மக்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 
 
பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததால் ஆன்லைன் கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. சுமார் 10 ஆயிரம் பேர் இதில் வாக்களித்தனர். 
 
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எப்படி பார்க்கப்படுகிறது என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு 38 சதவீதம் பேர் வெற்றி அடைந்துள்ளது எனவும், 32 சதவீதம் பேர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது எனவும், 30 சதவீதம் பேர் இரண்டும் கலந்து ஏற்பட்டுள்ளது எனவும் கூறி உள்ளனர்.
 
கருப்புப்பணத்தை மீட்பதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக மோடி அறிவித்தார். அதோடு 100 நாட்களுக்குள் மட்டும் மக்கள் பிரச்சனையை சந்திப்பார்கள். மக்கள் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளாம் எனவும் அறிவித்தார்.   
 
அதன் பின் தங்களிடம் இருந்த பணத்தை மாற்ற மக்கள் வங்கிகளில் மாற்ற வரிசையில் நாள் கணக்கில் தவம் கிடந்தார்கள். வங்கியில் பணம் செலுத்தியவர்கள், புதிய பணத்தை எடுக்க ஏ.டி.எம் மையங்களின் முன் குவிந்தனர். பல ஏ.டி.எம்-களில் பணம் நிரப்பப்படாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர்.
 
இப்படி இருந்து இந்த நடவடிக்கையை மக்கள் ஏற்றுக்கொண்டுதான் உள்ளனர் என்பது அச்சரியத்தை அளிக்கிறது.

எல்லாம் காட்டு

இண்டர்நெட் இல்லாமலே UPI-ல் பணம் அனுப்பலாம்!.. PhonePe புது ஆப் வந்தாச்சு!...

நேபாள வெள்ளம்!.. 8 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட 50 கோடி தங்கம்!...

இவரை பார்த்து கத்துக்கோங்க!.. சௌமியா அன்புமணிக்க்கு சட்டசபையில் கிடைத்த பாராட்டு!..

துயரத்திலும் மோசடி!.. நேபாள மக்களுக்கு உதவுவதாக போலி QR Code!.. மக்களே உஷார்!...

பாட்டிலுக்கு ரூ.10!.. நாங்க பண்ணா ஊழல்.. நீங்க பண்ணா நியாயமா?!.. சட்டசபையில் கே.என்.நேரு!..

அடுத்த கட்டுரையில்
Show comments