மாணவியை செல்போனில் படம் எடுத்த இளைஞருக்கு செருப்படி கொடுத்த மக்கள்
தெலுங்கானா மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவரை செல்போனில் படம் பிடித்த இளைஞரை மக்கள் செருப்பால் அடித்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் காமா ரெட்டில் மாவட்டத்தில் உள்ள பழைய ராஜா பேட்டை என்ற பகுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோவுக்கு அருகில் இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் மாணவியை செல்போனால் படம் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவி ஊர் மக்களிடம் கூறியிருக்கிறார். அப்போது அந்த இளைஞரை மடக்கிப்பிடித்த மக்கள் அவரை செருப்பால் அடித்து,. அருகில் உள்ள காவல் நிலையத்தில் கொண்டுபோய் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.