புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 28 பிப்ரவரி 2019 (10:58 IST)

தொடரும் பதற்றம் – மக்களிடம் பேசாமல் ஓடி ஒளியும் மோடி & நிர்மலா சீதாராமன்!

இந்தியா பாகிஸ்தான் இடையிலான அடுத்தடுத்த தாக்குதல்களால் இரு நாட்டிலும் பதற்றமான சூழல் நிலவும் வேளையில் மோடி இன்னும் மக்களிடம் இது குறித்து எதுவும் பேசாமல் மௌனம் காத்து வருகிறார்.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக இன்று பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. அதில் ஒரு விமானம் தவிர மற்ற இரண்டு விமானங்களும் தப்பி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் கொஞ்ச நேரத்தில் இந்திய விமானி ஒருவர் பாகிஸ்தான் வசம் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை முதலில் இந்திய அரசு மறுத்தது. பின்னர் பாகிஸ்தான் ஆதாரங்களை வெளியிட்டதும் இந்திய அரசு ஒப்புக்கொண்டது. இதையடுத்து தற்போது இந்திய அரசு பாகிஸ்தானிடம் இருந்து அந்த விமானி அபிநந்தனை மீட்பது தொடர்பாக பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள நிலைமைகள் குறித்து அந்நாட்டு பிரதமர் இருமுறை மக்களிடம் பேசி விளக்கமளித்துள்ளார். மேலும் இந்திய அரசுக்கும் பேச்சுவார்த்தைத் தொடர்பான கோரிக்கையை வைத்துள்ளார். ஆனால் இவ்வளவு பதற்றமான சூழ்நிலையிலும் இதுவரை மக்களிடம் பேசவில்லை. அடுத்தடுத்த தாக்குதல் நடந்துள்ள நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமனும் இதுவரை இந்தியா நடத்திய தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்கள் பற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதனால் மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.