வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (14:40 IST)

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

திருப்பதி லட்டு விவகாரத்தை ஒட்டி, ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாள் விரதத்தை தொடங்கியுள்ளார். இந்த பரிகார தீட்சையை முடித்த பின், ஏழுமலையானை தரிசிக்க போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குண்டூரில் அமைந்துள்ள ஸ்ரீ தசாவதார வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலில் சாமி தரிசனத்தை முடித்த பின், பவன் கல்யாண் தனது 11 நாள் விரதத்தை தொடங்கியுள்ளார். அக்டோபர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் திருப்பதி சென்று பாவ மன்னிப்பு கோர உள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக  திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இதனை அடுத்து பக்தர்கள் காட்டும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தந்து ஏழுமலையானை தரிசனம் செய்து புனிதமான பிரசாதம் என்று கருதப்படும் லட்டுக்களை வாங்கி செல்கின்றனர். ஆனால் அதில் விலங்குகளின் கொழுப்பு அதில் கலக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தியை அடுத்து தற்போது இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த லட்டு விவகாரம் தொடர்பாக பரிகாரம் செய்வதற்காக திருப்பதியில் குடமுழுக்கு செய்ய ஆலோசனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva