1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (06:15 IST)

இந்திய வீரர்களின் மனிதாபிமானத்திற்கு பாகிஸ்தான் நன்றி

கவனக்குறைவாக இந்திய எல்லையில் நுழைந்த முதியார் ஒருவரை இந்திய வீரர்கள் நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். இந்திய வீரர்களின் இந்த மனிதாபிமான செயலுக்கு பாகிஸ்தான் நன்றி கூறியுள்ளது.




பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சபீர் உசேன் என்ற முதியவர் கவனக்குறைவு காரணமாக இந்திய எல்லையான பஞ்சாப் மாகாணத்திற்குள்  நுழைந்துவிட்டார். அவரை கைது செய்த இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் அவரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர் பாகிஸ்தானின் நாரோவல் என்ற பகுதியை சேர்ந்தவர் என்றும் கவனக்குறைவு காரணமாக  இந்திய எல்லைக்குள் நுழைந்தார் என்பதும் தெரிய வந்தது.

பின்னர் மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளதாக  இந்திய எல்லை பாதுகாப்புப் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்களின் இந்த மனிதாபிமான செயலுக்கு பாகிஸ்தான் வீர்ர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்