1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 13 நவம்பர் 2017 (17:09 IST)

குஜராத் தேர்தல் காங்கிரஸ் முன்னேற்றம்? கருத்து கணிப்பின் முடிவுகள்!!

குஜராத்தில் நடைபெறயுள்ள தேர்தலில் காங்கிரஸ் அணி வெற்றி பெரும் என கருத்து கணிப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.


 
 
குஜராத்தில் டிசம்பர் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. 
 
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவின் வெற்றி சுலபமாக இருக்காது என்கிறது கருத்து கணிப்பு தகவல்கள்.
 
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் பாஜகவின் வாக்கு சதவீதம் 47 என்ற அளவிலும் காங்கிரஸ் வாக்கு சதவீதம் 41 என்ற அளவிலும் இருந்துள்ளது.
 
காங்கிரசுக்கு இது 12 சதவீதம் கூடுதல் வாக்குகள். முந்தைய கருத்து கணிப்புடன் ஒப்பிடும் போது காங்கிரஸ் படு வேகமாக முன்னேறியுள்ளது என இந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. 
 
தேர்தல் நெருங்கும்போது மேலும் காங்கிரஸுக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் மாறவும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.