திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (16:17 IST)

ஈவ் டீசிங்யை தடுக்க ஆபரேஷன் ரோமியோ: 121 பேர் கைது

ஈவ் டீசிங்கைத் தடுக்க ‘ஆபரேஷன் ரோமியோ’ என்ற பெயரில் காவல் துறையினர் ஈடுப்பட்டுள்ளனர். இதில் 121 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 

 
குர்கான் பகுதியில் ஈவ் டீசிங் தொடர்பாக அதிக புகார்கள் வந்ததையடுத்து, காவல்துறையினர் துணை ஆணையர் தர்னா யாதவ் தலைமையிலான குழுவினர் ஆபரேஷன் ரோமியோ என்ற பெயரில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 
 
மகாத்மா காந்தி சாலையில் மட்டும் நேற்றிரவு பெண்களிடம் ஈவ் டீசிங்கில் ஈடுபட்டதாக 121 இளைஞர்களைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.