செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (15:24 IST)

ஒரு வாரத்திற்கு ஆறு நாட்கள் தான் உள்ளது - பள்ளி தலைமை ஆசிரியரின் பலே அறிவுத்திறன்

படிப்பறிவில்லாதோருக்கு கூட வாரத்திற்கு 7 நாட்கள் உள்ளது என்று தெரியும் நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் வாரத்திற்கு 6 நாட்கள் என மாணவர்களுக்கு பாடம் கற்பித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் கன்சாபெல் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராஜேஸ் குமார் சூர்யவன்ஷி. இவர் பள்ளிக்கு பெரும்பாலான நாட்கள் குடித்துவிட்டு வருவதாகவும், மாணவர்களுக்கு ஒழுங்காக பாடம் எடுப்பதில்லை எனவும் மாணவர்களின் பெற்றோர்கள் வெகுநாளாக குற்றம் சாட்டி வந்தனர்.
 
இந்நிலையில் ராஜேஸ் குமார் சூர்யவன்ஷி வாரத்தின் நாட்கள் குறித்து மாணவர்களுக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார். அப்போது வாரத்தில் 6 நாட்கள் தான் உள்ளது என்றும், ஆங்கில வார்த்தையை பிழையோடு எழுதியும் மாணவர்களுக்கு பாடம் கற்பித்தார். இதனை வீடியோவாக எடுத்த ஒருவர் அதனை சமூக வலைத்தளத்தில் பரவவிட்டார். 
 
இதனையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி ராஜேஸ் குமாரை சஸ்பெண்ட் செய்துள்ளார், மேலும் இது தொடர்பாக துறை ரீதியிலான விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.