தெற்கு ரெயில்வேக்கு ஒரே ஒரு வந்தே பாரத் ரெயில்ஒதுக்கீடு!
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் புல்லட் ரயிலை விட அதிக வேகத்தில் இயங்கும் என்றும் இதன் சோதனை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் வந்து வந்தே பாரத் ரயில் சென்னை ஐசிஎப் ஆலையில் தயாரிக்கப்பட்ட நிலையில் இந்த ரயில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் என்பது தெரிய வந்துள்ளது
இந்த நிலையில் சென்னை ஐசிஎப் ஆலையில் 27 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் பெரும்பாலும் வட இந்தியாவில் இயக்க திட்டமிட்டு உள்ளது
இருப்பினும் சென்னையில் இருந்து பெங்களூர் செல்வதற்கான வந்தே பாரத் ரயில் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மதுரை அல்லது கோவையில் இருந்து வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது