சபரிமலைக்கு ஆன்லைன் முன்பதிவு தேவையில்லை: இவர்களுக்கு மட்டும்...!!
5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவையில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு.
சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அங்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஆனால் இனி சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். உடனடி முன்பதிவு மூலமாக தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் கூடுதலாக அனுமதிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவையில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.