மும்பையில் புதிய வகை ஒமிக்ரான்: 10 மடங்கும் பரவும் என அதிர்ச்சி தகவல்!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மனித இனத்தையே ஆட்டி வைத்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து உள்ளது
இந்த நிலையில் திடீரென இங்கிலாந்து நாட்டில் புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரித்திருந்தது
இந்த நிலையில் தற்போது மும்பையில் புதிய வகை ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த ஒமிக்ரான் எக்ஸ்.ஈ என்ற வகையைச் சேர்ந்தது என்றும் கண்டறியப்பட்டுள்ளது
ஒமிக்ரான் எக்ஸ்.ஈ வகை வைரஸ் சாதாரண வைரஸை விட பத்து மடங்கு வேகமாக பரவக்கூடியது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது