கேரளாவிற்கும் பரவியது ஒமிக்ரான் தொற்று: தமிழகத்திலும் பரவுமா?
உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் ஒரு சில மாநிலங்களில் பரவி விட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முப்பத்தி எட்டு பேர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று கேரளாவிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் நபர்களுக்கு முழுமையாக பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்து உள்ளது
ஆனால் அதே நேரத்தில் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களை முழுமையாக பரிசோதனை செய்ய போதுமான ஊழியர்கள் இல்லை என்றும் கூறப்பட்டு வருவதால் தமிழகத்திலும் தோற்று பரவி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.