நாட்டில் எங்கும் மோடி அலை இல்லை என நக்மா பேச்சு
இந்தோரில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த காங்கிரஸ் கட்சியின் மீரட் தொகுதி வேட்பாளர் நக்மா, நாட்டில் எங்கும் மோடி அலை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் நடிகை நக்மா போட்டியிடுகிறார். இவர் இந்தோர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சத்யநாராயன் படேலை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், பாஜக நாடெங்கும் மோடி அலை வீசுவதாக கூறிவருகிறது. நான் சொல்கிறேன் நாட்டில் எங்கும் மோடி அலை இல்லை.
அவ்வாறு மோடிக்கு ஆதரவாக மோடி அலை இருந்திருந்தால், மோடி ஏன் பாதுகாப்பான தொகுதியில் இருந்து போட்டியிட வேண்டுமென கேள்வி எழுப்பிய நக்மா, பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேசம் ஊழலிலும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலிலும் முதல் இடத்தை பிடித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.