கேந்திரியா வித்யாலா பள்ளிகளில் எம்.பி.களுக்கு இட ஒதுக்கீடா? மத்திய அரசு விளக்கம்..!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்பி களுக்கான இட ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டுவரும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது
நாடு முழுவதும் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் எம்பிக்களுக்கான இட ஒதுக்கீடு திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
இவ்வாறான திட்டம் இல்லை என மக்களவையில் அமைச்சர் அன்னபூர்ணா தேவி தெரிவித்துள்ளார். 788 எம்பி களின் பரிந்துரையில் 7800 குழந்தைகள் பள்ளிகள் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு மத்திய அரசு இந்த வருட ஒதுக்கீடு ரத்து செய்தது.
அதிக மாணவர்கள் சேர்க்கப்பட்டதால் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
Edited by Siva