இனி திறந்தவெளியில் மலம் கழிக்க கூடாது
இனி திறந்தவெளியில் மலம் கழிக்க கூடாது
திறந்தவெளியில் மலம் கழித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ஜமால்பூர் கிராமத்தில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனாலும், சிலர் அந்த கழிப்பறைகளை பயன்படுத்தாமல் திறந்தவெளியில் மலம் கழிக்கின்றனர். இந்நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும், மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட துணை ஆட்சியர் சுனில் குமார் கூறியுள்ளார்.