அல்வா சகிதம் ஆரம்பித்த பட்ஜெட் பணிகள்: தொடங்கி வைத்த நிதி அமைச்சர்
2020ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலுக்கான அச்சிடும் பணிகளை அல்வா தயார் செய்து கொடுத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்த பாஜக 2020ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. கடந்த ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை போல் அல்லாமல் இந்தாண்டில் வரி சலுகைகள், நலத்திட்டங்கள் சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் தயாரிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் பட்ஜெட் அறிக்கையை அச்சிடும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. இதை தொடங்கி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழக்கப்படி அல்வா தயார் செய்து ஊழியர்களுக்கு அளித்தார்.