Daily Horoscope
✕

வாட்ஸப், ஜூம், ஸ்கைப் கால்களுக்கு புதிய கட்டுப்பாடு! – மத்திய அரசு அதிரடி!

Written By Prasanth Karthick
Updated: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (09:55 IST)
இணைய வழி கால்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது.

இந்தியா முழுவதும் இணைய சேவை வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் ஆடியோ, வீடியோ கால்களுக்கும் மக்கள் தற்போது இணையவழி சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இணையவழி ஆடியோ, வீடியோ கால் அழைப்புகளுக்கு வாட்ஸப், ஸ்கைப், ஜூம் உள்ளிட்ட செயலிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் புதிதாக தொலைத்தொடர்பு மசோதா 2022 – ஐ உருவாக்கி வருகிறது. இந்த புதிய மசோதாவில் ஓடிடி மற்றும் அனைத்து இணைய வழி சேவைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி இணையவழி கால் வசதிகளை வழங்கும் செயலிகள் மத்திய அமைச்சகத்திடம் உரிமம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலிகள் சேவைகளுக்கான உரிமம் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் பதிவு கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும் என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

ரூ.500 வரைக்கும் SMS அலார்ட் இல்லை!.. UPI விதிகளில் மாற்றம்...

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் நிறைவேற்றப்படாத தீர்ப்புகள்.. தமிழ்நாடு மட்டும் ஏன்?...

தவெக அரசின் அப்பட்டமான தோல்வி - முக ஸ்டாலின் காட்டம்

உச்சநீதிமன்ற தீர்ப்பை விட மோசமானது.. திமுகவை விமர்சித்த திருமாவளவன்...

பாஜகவின் தொகுதி மறுவரைறை மசோதாவுக்கு திமுக திடீர் ஆதரவு..

அடுத்த கட்டுரையில்
Show comments