ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 3 டிசம்பர் 2020 (22:46 IST)

அமித்ஷா மகன் ஜெய்ஷாவுக்கு புதிய பதவி??

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக ஆட்சி இரண்டாவது முறையாக நடைபெற்று வருகிறது. மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில்,  அமித்ஷாவின்  மகன்  ஜெய்ஷாவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-ன் ஆண்டுப் பொதுக்கூட்டம் வரும் 24 ஆம் தேதி கூடுகிறது.

எனவே ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுகு பிசிசிஐ பிரதிநிதியாக ஜெய்ஷா தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகிறது.  மேலும் இந்த கவுன்சிலிங்கில் மேலும் இரண்டு புதிய அணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும் எனத் தெரிகிறது.