வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (19:42 IST)

”இந்தியாவுக்கு கூடவா ஸ்பெல்லிங் தெரியாது”.. இணையத்தில் பங்கமாய் கலாய் வாங்கும் பாஜக

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்திய பாஜகவினர் தான் வைத்திருத்த பேனரில் இந்தியாவுக்கு பதில் “இனிடா” என அச்சிடப்பட்டிருந்ததை நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே பாஜகவினர் குடியுரிமை திருத்த சட்டத்தை குறித்த சரியான புரிதலை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேரளா மாநிலத்தில் பாஜகவினர் நடத்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான கூட்டத்தில் கைகளில் வைத்திருந்த பேனரில் “CAA FOR INDIA” என்பதற்கு பதிலாக “CAA FOR INIDA” என தவறாக அச்சிடப்பட்டுள்ளது. இதனை சூபி என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அதனை சுட்டிக்காட்டி பகிர்ந்துள்ளார். இதனை நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.