1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 17 ஜூன் 2017 (20:56 IST)

இமயமலை உயரம் குறைந்துவிட்டதா? ஆய்வு நடத்தும் நேபாளம்

2015ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக இமயமலையின் உயரம் மற்றும் இருப்பிடம் மாறியிருக்கலாம் என நேபாளம் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


 
2015ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இமயமலையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என நேபாளம் ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் இமயமலை உயரம் குறித்து ஆராய உள்ளதாக தெரிவித்துள்ளனர். மலை உச்சியின் மூன்று இடங்களிலிருந்து இமயமலையின் உயரத்தை அளக்கும் பணி நடைப்பெறும் என்றும், அதற்கு சுமார் 75 கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
நிலநடுக்கத்திற்கு முன்பு 8,848 மீட்டர் உயரம் இருந்த இமயமலை தற்போது அதே உயரத்தில் இருக்கிறாதா அல்லது உயரம் குறைந்துள்ளதா என்பது ஆய்வுக்கு பின் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நடத்த ஷெரப்பா மலை இன மக்களின் உதவியை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.