1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2016 (11:53 IST)

‘என்.டி.டி.வி. இந்தியா’ சேனல் ஒளிபரப்புக்கு தடை - மோடி அரசு அதிரடி

பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான செய்தியைப் பொறுப்பற்ற விதத்தில் ஒளிபரப்பு செய்ததாக ‘என்.டி.டி.வி. இந்தியா’ ஹிந்தி சேனல் ஒளிபரப்புக்கு, 24 மணி நேரத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
 

 
பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்திற்குள் கடந்த ஜனவரி 2ஆம் தேதி திடீரென பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புப் படை வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். எனினும் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 6 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
இந்த தாக்குதல் சம்பவத்தின்போது, சென்சிட்டிவான சில விவகாரங்களை ‘என்.டி.டி.வி இந்தியா’ ஹிந்தி சேனல் ஒளிபரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஏற்கெனவே மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின்போது டிவி சேனல் ஒளிபரப்புதான் அதிக உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், என்டிடிவி-யின் செய்தி ஒளிபரப்பு கேள்விக்கு உள்ளானது. இதுதொடர்பாக விசாரித்த மத்திய அமைச்சரகங்களுக்கு இடையேயான கமிட்டி, குற்றச்சாட்டில் உண்மையிருப்பதாக கமிட்டி கருதியது.
 
எனவே, ‘என்.டி.டி.வி இந்தியா’ ஹிந்தி சேனலை 24 மணிநேரம் முடக்க அது பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, நவம்பர் 9ஆம் தேதி பிற்பகல் 1 மணி முதல் மறுநாள் பிற்பகல் 1 மணிவரை என்.டி.டி.வி இந்தியா’ ஹிந்தி சேனலை ஒளிபரப்பத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
 
நாட்டின் பாதுகாப்பு காரணங்களை முன் வைத்து, ஒரு டி.வி. சேனலின் ஒளிபரப்புக்கு தடை விதித்து, தண்டனை வழங்கியிருப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.