1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 10 பிப்ரவரி 2024 (18:17 IST)

யூடியூப் பயனர்களுக்கு இனி தேசிய விருது: மத்திய அரசின் அதிரடி திட்டம்..!

திரைப்படங்களுக்கு தேசிய விருது அளிக்கப்பட்டு வருவது போல் யூடியூப் பயனாளிகளுக்கும் தேசிய விருது அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யூடியூப்  பயனாளிகளுக்கு மட்டுமின்றி சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு தேசிய விருது வழங்கப்படும் என தெரிகிறது.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்கள் சிறந்த நடிகர் உள்பட தேசிய விருதுகளை வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் ,நாட்டின் வலிமையை, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் சிறந்த வீடியோக்களை பதிவிடுபவர் பதிவிடும் யூடியூப் பயனர்களுக்கு தேசிய விருது வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
அதேபோல் சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் இந்திய கலாச்சாரத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் வகையில் பதிவிடுபவர்களுக்கும் தேசிய விருது வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே யூட்யூபை இனி பொழுதுபோக்காக கருதாமல் பயனுள்ள வீடியோக்களை பதிவு செய்தால் தேசிய விருது கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran