1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (12:41 IST)

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு நரேந்திர மோதி தலைமை

ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்த மாதத்துக்கான தலைமைப் பொறுப்பில் இந்தியா இருக்கும் சூழலில், இன்று நடக்கவுள்ள அதன் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோதி தலைமை வகிக்கவுள்ளார்.

 
இக்கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர் ஆகிறார் நரேந்திர மோதி. 2021 ஜனவரி 1ஆம் தேதி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பினர் ஆனது. இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக இருக்கும். பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பு மாதம்தோறும் உறுப்பு நாடுகளுக்கிடையே சுழற்சி முறையில் மாறும்.