Daily Horoscope
✕

விமானப் பணிப்பெண்களிடம் சில்மிஷம் - தொழிலதிபர் கைது

Written By Murugan
Updated: திங்கள், 27 பிப்ரவரி 2017 (12:16 IST)
பறக்கும் விமானத்தில் பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் குப்தா(23) என்ற தொழிலதிபர் கடந்த 25ம் தேதி நாக்பூரில் இருந்து மும்பைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. 
 
அந்நிலையில், விமானத்தில் இருந்த பணிப்பெண்கள் 2 பேரின் கையை பிடித்து இழுத்து அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, அந்த பணிப்பெண்கள் இருவரும் கடிதம் மூலம் விமானத்தின் கேப்டனுக்கு புகார் தெரிவித்தனர். அவர் உடனடியாக மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளித்தார்.
 
அவர்கள் இந்த புகாரை நாக்பூரில் உள்ள சோனெகான் காவல் துறையினருக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் விரைந்து சென்று, ஆகாஷ் குப்தாவை கைது செய்தனர். அதன்பின், அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

எல்லாம் காட்டு

மதுரை நகை கடை கொள்ளையில் புதிய டிவிட்ஸ்ட்!.. போலீசார் விசாரணை....

ஒரே ஆண்டில் மூன்று விதமான வாக்காளர் எண்ணிக்கைகள்.. என்ன நடக்கிறது எஸ்.ஐ.ஆர் பணியில்?

சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை எரித்து சீக்கியர்கள் போராட்டம்.. என்ன காரணம்?

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாக்கள்.. விரைவில் நிறைவேற்றமா?

மைக்ரோசாப்ட் சேவைகளில் திடீர் பிரச்சனை.. அவுட்லுக் உள்பட அனைத்தும் முடக்கம்...

அடுத்த கட்டுரையில்