வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2024 (09:04 IST)

பெண் டாக்டர் கொலை: மருத்துவமனையை இடித்து தடயங்கள் அழிப்பு? - மம்தா பானர்ஜி மீது பாஜக குற்றச்சாட்டு!

Woman doctor murder

கொல்கத்தாவில் பெண் டாக்டர் பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவமனையில் தடயங்களை அழிக்கும் முயற்சியில் மம்தா அரசு ஈடுபடுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

 

 

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவு நேர பணியில் ஈடுபட்டிருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் சமீபத்தில் மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை தேவை என மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சஞ்சய்ராய் என்ற நபரை கைது செய்துள்ளனர். விசாரணையில் வாக்குமூலம் அளித்த சஞ்சய் ராய், தன்னை ஒரு போலீஸ் என சொல்லி பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக அவன் கூறியுள்ளான்.
 

 

இந்த களேபரங்கள் குறையாத நிலையில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கொலை சம்பவம் அரங்கேறிய பகுதியில் குறிப்பிட்ட சில அறைகளை இடித்து சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. குற்ற சம்பவம் நடந்த இடத்தில் இவ்வாறாக கட்டிட பணிகள் மேற்கொள்வது, உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக, தடயங்களை மறைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சி என்று பாஜக ஐடி பிரிவின் தலைவர் அமித் மால்வியா குற்றம் சாட்டியுள்ளார்.

 

Edit by Prasanth.K