திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (14:56 IST)

மீண்டும் பங்குச்சந்தை சரிவு: சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை குறைந்தது!

sensex
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்றத்தில் இருந்து வந்தது என்பதும் குறிப்பாக நேற்று ஒரே நாளில் 1300 க்கும் அதிகமான சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச் சந்தை சரிந்துள்ளது
 
சற்றுமுன் பங்குச் சந்தை 250 புள்ளிகள் சரிந்தது சென்செக்ஸ் 60,358 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் நிப்டி 50 புள்ளிகள் சரிந்து 18000 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஏற்றம் வந்தால் அதற்கு அடுத்த நாள் ஒரு சிறிய சரிவு ஏற்படும் என்று பங்குச்சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்