ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 ஜூலை 2024 (08:58 IST)

6 மணி நேரம் விடாமல் பெய்த மழை! மூழ்கிய மும்பை! - பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!

Mumbai Rains

வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மும்பையில் சில மணி நேரங்களில் அதிகளவிலான மழை பெய்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாகவே அரபிக்கடலோர மாநிலங்கள், வடமேற்கு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளதுடன், அருவிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் சில மணி நேரங்களுக்கும் மொத்தமாக மழை பெய்வதும் தொடர்கிறது.

இந்நிலையில் நேற்று இரவு முதலாக மும்பையில் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. விடியும்வரை 6 மணி நேரமாக தொடர்ந்து மும்பையில் கனமழை பெய்த நிலையில் பல பகுதிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 6 மணி நேரத்திற்குள்ளாகவே 30 செ.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் மும்பையே வெள்ளக்காடாகியுள்ள நிலையில் ரயில் நிலையங்களிலும் மழை வெள்ளம் சூழ்ந்ததால் குறைவான அளவிலேயே ரயில்கள் இயக்கப்படுகின்றது. கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K