வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 2 மார்ச் 2024 (17:04 IST)

மும்பை தாக்குதல் முக்கிய குற்றவாளி உயிரிழப்பு

mumbai taj atttack
மும்பை தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான லஸ்கர் இ  தொய்பா அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் மர்மான முறையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.
 
இந்தியாவின் மும்பையில்  கடந்த 2008 ஆம் ஆண்டு  நவம்பர் 26 ஆம் தேதி, பாகிஸ்தான்  நாட்டில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ  தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த கும்பல் தொடர் தாக்குதல் நடத்தினர்.
 
இதில், 166  பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 9  பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
 
இத்தாக்குதலுக்கு அந்த  பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயது என்ற பயங்கரவாதி மூளையாக செயல்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தானில் அந்த நாட்டு ராணுவப் பாதுகாப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும்,மும்பை தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான லஸ்கர் இ  தொய்பா அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் மர்மான முறையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.
 
70 வயதான அசிம் சீமா மும்பை தாக்குதலுக்கு திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளில் ஒருவர் எனவும், அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.