1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 8 மே 2017 (05:41 IST)

கருணாநிதி வழியில் நடந்திருந்தால் இந்த தோல்வி கிடைத்திருக்காது. முலாயம்சிங் யாதவ்

திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு 90 வயதுக்கு மேல் ஆகியும் இன்னும் கட்சி தலைமையையும், வெற்றி பெற்றால் முதல்வர் பதவியையும் சொந்த மகனாக இருந்தாலும் மு.க.ஸ்டாலினுக்கு அவர் வழங்காமல் உள்ளார். இதுகுறித்து பலர் எதிர்மறை விமர்சனம் வந்தாலும், தற்போது கருணாநிதியின் இந்த முடிவை பாராட்டும் வகையில் உபி முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் கூறியுள்ளார்.



 


கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அகிலேஷை முதல்வர் ஆக்காமல் நான் முதலமைச்சராக தொடர்ந்து இருந்திருந்தால் உபி மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சமஜ்வாதி கட்சிக்கு இது போன்ற பெரிய தோல்விக கிடைத்து இருக்காது.

குறிப்பாக நான் முதல்வராக இருந்திருந்தால் கண்டிப்பாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்க மாட்டேன். காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது அகிலேஷ் செய்த பெரிய தவறு, அதுவே சமாஜ்வாதி கட்சியின் தோல்விக்கு வழிவகுத்தது. நான் அகிலேஷிடம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கக்கூடாது என அறிவுறுத்தினேன் ஆனால், அகிலேஷ் கவனத்திலேயே எடுத்துக்கொள்ளவில்லை. இவ்வாறு கூறினார் முலாயம்சிங் யாதவ் வருத்தத்துடன் கூறியுள்ளார். கருணாநிதி இந்த விஷயத்தில் மிகச்சரியான முடிவை எடுத்ததாக முலாயம்சிங் யாதவ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.