செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 20 டிசம்பர் 2017 (22:43 IST)

பிரதமர் மோடியுடன் விராத்கோஹ்லி-அனுஷ்கா சர்மா சந்திப்பு

கடந்த வாரம் இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவருக்கும் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்

இந்த நிலையில் திருமணம் மற்றும் தேனிலவு முடிந்து விராத்கோஹ்லி-அனுஷ்கா ஷர்மா தம்பதிகள் இன்று இந்தியா திரும்பினர். நாடு திரும்பியதும் பாரத பிரதமர் நரேந்திரமோடியை விராத்-அனுஷ்கா தம்பதிகள் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றனர்.

விராத்-அனுஷ்கா தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இருவருக்கும் திருமண பரிசுகளை வழங்கினார். இந்த சந்திப்பின்பொது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.