1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 7 மே 2017 (14:30 IST)

தாயும், மகனும் சேர்ந்து 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரம்!

தாயும், மகனும் சேர்ந்து 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரம்!

மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் 16 வயது சிறுமியை 8 மாதமாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் மற்றும் சித்ரவதை செய்ததாக 25 வயது இளைஞர் மற்றும் அவரது தாய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.


 
 
தானேவின் பஞ்பகாடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 8 மாதத்துக்கு முன்னர் வேலைக்கு சென்றுள்ளார் பாதிக்கப்பட்ட அந்த 16 வயது சிறுமி. அப்போது அந்த வீட்டில் உள்ள பெண்ணும் அவரது மகனும் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
 
வேலைக்கு சேர்ந்த தொடக்கத்தில் சிறுமியை கொடுமைப்படுத்திய அவர்கள் பின்னர் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக சிறுமியை மிரட்டிய அவர்கள், வேலை செய்து முடித்த பின்னர் ஒரு அறையில் வைத்து பூட்டியுள்ளனர்.
 
இதனையடுத்து பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் அவர்களிடம் இருந்து தப்பித்த சிறுமி இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண்ணையும் அவரது மகனையும் தேடி வருகின்றனர்.