10,000ஐ விட குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு.. மத்திய சுகாதாரத்துறை தகவல்..!
இந்தியாவில் சமீபத்தில் 11,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 10,000ஐ விட குறைந்து 9,111 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். .
மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 9,111 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மொத்தம் 60000ஐ கடந்து சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இருப்பினும் நாடு முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடப்பட்டு வருகின்றன.
Edited by Siva