சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2022 (12:18 IST)

தொங்கு பாலம் விழுந்தது எப்படி? வெளியானது அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி!

Gujarat Bridge CCTV
குஜராத் மாநிலம் மோர்பில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த சம்பவத்தின் அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் மோர்பி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் நேற்று மாலை அறுந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 141 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு குழுவினர், ராணுவம் சம்பவ இடம் விரைந்து மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தொங்கு பாலம் அறுந்து விழுந்தது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. தற்போது பாலம் அறுந்து விழுந்தது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிலர் பாலத்தை ஆட்டியதால் மொத்தமாக அறுந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் பாலம் புணரமைக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு சான்றிதழ் வழங்கும் முன்னே மக்கள் பயணிக்க பாலம் அனுமதிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edited By Prasanth.K