புறாக்கள் மூலம் மோடிக்கு எச்சரிக்கை!!
உளவு பார்பதற்காக கொண்டு வரப்பட்ட 150 புறாக்களை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சவுக் பகுதியில் போலீஸார் சோதனையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக வாழைப்பழம் கொண்டு செல்லப்படும் பெட்டியில் 150 புறாக்களை பதுக்கிவைத்து கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடித்தனர்.
இந்த புறாக்களை கொண்டு சென்றவர்கள் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 144 பிரிவின் படி கைது செய்தனர். புறாக்களை பறிமுதல் செய்து ஒரு விலங்குகள் நல வாரிய தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
புறாவின் கால்களில் சந்தேகத்துக்குரிய வகையில் வளையங்களும், அதோடு இணைக்கப்பட்டிருந்த காந்த பொருட்கள் மீது சந்தேகம் எழுப்பு தொண்டு நிறுவனம் புகார் தெரிவித்தது.
இதையடுத்து இந்த புறாக்கள் உளவு பார்ப்பதற்காக கொண்டு வரப்பட்டதா என்ற பெயரில் போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னர் பஞ்சாபில் போலீசாரால் பிடிக்கப்பட்ட புறா ஒன்றில் பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடும்படி செய்தி எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் இதுவும் இருக்க கூடும் என விசாரணை நடந்து வருகிறது.