வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2019 (15:28 IST)

ஆப்செண்ட் ஆகும் பாஜக எம்.பிகள் – அதிருப்தியில் மோடி !

நாடாளுமனற அவைக் கூட்டங்களில் பாஜக எம்.பி.கள் கலந்து கொள்ளாததால் பிரதமர் மோடி அதிருப்தியில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாஜகவுக்கு நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை இருந்தும் அதன் எம்.பிகள் பலர் முறையாக அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதில்லை என சொல்லப்படுகிறது. இது பிரதமர் மோடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது சம்மந்தமாக நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘எந்த காரணமும் இல்லாமல் எம்.பிகள் அவைக்கு வராமல் இருப்பதை மோடி கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். அதனால் அனைவரும் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.