செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (15:57 IST)

”அதை” பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை..மோடி பிரச்சாரம்

வாக்கு வங்கி அரசியலை பற்றி எனக்கு கவலை இல்லை என மோடி பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முன்னதாக 2 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் 3 ஆவது கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் தன்பாத் நகரில் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அதில் பேசிய மோடி, “ராம ஜென்ம பூமி விவகாரத்தை காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே நிலுவையில் வைத்திருந்தது. தேசத்தின் நலனுக்கான விஷயங்கள் அவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான்” என குற்றம் சாட்டினார்.

மேலும், அவர் அக்கூட்டத்தில் “ஜார்கெண்டின் உருவாக்கம் பற்றிய பிரச்சனைகளையும்  காங்கிரஸ் பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது. ஜார்கெண்டை உருவாக்கியது அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு தான். வாக்கு வங்கி அரசியல் பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. எப்போதும் மக்கள் நலனே முக்கியம்” எனவும் தெரிவித்துள்ளார்.