Daily Horoscope

மோடிக்கு திட்டம் என்றால் என்னவென்றே தெரியாது! அமெரிக்க ஆய்வாளர் கருத்து!

Updated: சனி, 25 ஏப்ரல் 2020 (11:33 IST)
இந்தியாவில் எந்தவொரு திட்டமும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவைப் பரவலைத் தடுக்க, கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு கம்மியாக இருந்தாலும், நாம் அதிகமாக இன்னும் சோதனைகள் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் மே 3 ஆம் தேதியோடு முடியவிருந்த ஊரடங்கு மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் எந்தவொரு திட்டமும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு பொருளாதாரத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளாவது ‘நோய்த்தொற்றை பரிசோதிக்கும் மற்றும் சிகிச்சை அளிக்கும் திறன் குறைவாக உள்ளது. அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலை சில அத்தியாவசிய சேவைகளை பாதிக்கிறது. பிரதமர் மோடிக்கு திட்டம் என்றால் என்னவென்று கூட தெரியாது என்று நான் கருதுகிறேன். மோடியின் நடவடிக்கைகளால் ஏழைகள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments