1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : வியாழன், 9 மார்ச் 2017 (17:12 IST)

மினிமம் பேலன்ஸ் உயர்த்தப்பட்டதற்கு மோடிதான் காரணம். எஸ்பிஐ வங்கி தலைவர் அதிரடி

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாநகரப் பகுதிகளில் உள்ள கணக்குகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகையாக ரூபாய் 5000 இருக்க வேண்டும் என்றும், ஏ.டி.எம்.களில் மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை தொகை வசூலிக்கப்படும் என்றும் அதிரடியாக புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும்  எஸ்.பி.ஐ வங்கியின் இந்த நடவடிக்கையை  மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அவ்வங்கியிடம் வலியுறுத்தியிருந்தது



 


இந்நிலையில் சேமிப்புக் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் அதிகப்படுத்த பிரதமர் மோடியே காரணம் என்றும், பிரதமரின் ஜன் தன் வங்கிக் கணக்குகள் 10 கோடிக்கும் அதிகமாக எஸ்.பி.ஐ வங்கியில் உள்ளதால், இந்த கணக்குகளை பராமரிக்க கூடுதல் செலவு ஏற்படுதாகவும் அதனை ஈடுகட்டவே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐ வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார்.

எஸ்பிஐ வங்கி மினிமம் பேலன்ஸை உயர்த்த பிரதமர் தான் காரணம் என்பது பொதுமக்களுக்கு தற்போதுதான் தெரிய வந்துள்ளது.