வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (08:58 IST)

தேசிய கொடியை ஏற்றினார் மோடி: முப்படைகள் அணிவகுத்து மரியாதை

73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி, தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

இன்று இந்தியா முழுவதும் 73 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில், முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுகொண்டு, 21 குண்டுகள் முழங்க மூவர்ண தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

அதன் பின்னர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றிய மோடி, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம் சர்தார் வல்லபாய் படேலின் கனவு நினைவாகியது எனவும், காஷ்மீரில் சமூக நிலையை கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற பல புதிய திட்டங்களை செய்ய தொடங்கிவுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து பல முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக இஸ்லாமிய பெண்களின் உரிமையை மீட்க முத்தலாக் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்படும் என பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் கூறியது குறிப்பிடத்தக்கது.