1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 8 ஏப்ரல் 2017 (11:39 IST)

தமிழக விவசாசியிகள் மீது தடியடி நடத்திய மோடி அரசு!!

டெல்லியில் தமிழக விவசாயிகள் சில கோரிக்கைகளை முன்வைத்து 25 நாட்களுக்கும் மேலாக போரட்டம் நடத்தி வருகின்றனர். 


 
 
டெல்லியில், ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் தங்களது வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், ரிசர்வ் வங்கியை முற்றுகையிட பேரணியாகச் சென்றனர்.
 
இந்நிலையில் விவசாயிகள் ரிசர்வ் வங்கி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டெல்லி போலீஸார் விவசாயிகளிடம் வன்முறையாகக் கையாண்டு, தடியடி நடத்தினர். 
 
பேரணியாகச் சென்ற அய்யாக்கண்ணு உள்ளிட்ட அனைத்து விவசாயிகளையும் தடியடி நடத்தி வேனில் ஏற்றினர். 
 
பின்னர், அய்யாக்கண்ணு தவிர மற்றவர்களை ஜந்தர் மந்தர் பகுதியிலேயே இறக்கிவிட்டனர். ஆனால், விவசாயிகள் ஜந்தர் மந்தர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால், அய்யாக்கண்ணையும்  காவல்துறை விடுதலை செய்தது.