1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 15 ஏப்ரல் 2024 (15:20 IST)

ஒரே நாளில் மோடி, ராகுல் காந்தி பிரச்சாரம்.. கேரளாவில் பரபரப்ப்பு..!

இன்று ஒரே நாளில் கேரளாவில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து வருவதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கேரள மாநிலத்திற்கு இரண்டாம்  கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது

இந்த நிலையில் இன்று கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசி வரும் நிலையில் அதே கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி தனக்கு வாக்களிக்கும்படி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்

ஒரே நேரத்தில் கேரளாவில் இரண்டு பேரும் தலைவர்கள் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி சாலை பேரணியில் ஈடுபட்டு பிரச்சாரம் செய்து வருவதாக தெரிகிறது

 முன்னதாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளாவுக்கு சென்றார். அதேபோல் பாலக்காடு பகுதியில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்

இதனை அடுத்து அவர் திருச்சூர் சென்று அங்கும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் இன்று மாலை அவர் நெல்லை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Edited by Siva