ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2020 (09:59 IST)

மொபைல் கட்டணங்கள் 10 மடங்கு உயருமா? பரபரப்பு தகவல்

மொபைல் கட்டணங்கள் தற்போது மிகக் குறைவாக இருக்கும் நிலையில் விரைவில் மொபைல் கட்டணங்கள் 10 மடங்கு உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாடிக்கையாளர்களுக்கு செல்போன் கட்டணங்கள் அந்தந்த நிறுவனங்களே முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனை அடுத்து கடுமையான போட்டி காரணமாக ஒவ்வொரு நிறுவனமும் செல்போன் கட்டணங்கள் குறைத்து தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை பெறவும் முயற்சித்தது. 
 
குறிப்பாக ஜியோவின் வருகைக்குப் பின்னர் தொலைதொடர்பு நிறுவனங்கள் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக கட்டண விவகாரத்தில் அரசு தலையிட வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. இந்த கோரிக்கையை பரிசீலித்த நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி இதுகுறித்து கூறியதாவது:
 
தொலைபேசி அழைப்புகள் மற்றும் 'மொபைல் டேட்டா'க்களுக்கு, தொலைபேசி நிறுவனங்கள், குறைந்தபட்ச அடிப்படை விலை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி அளிப்பதை தவிர, வேறு வழியில்லை' என்று கூறியுள்ளார். இதையடுத்து, தொலைபேசி கட்டணங்கள், தற்போதைய விலையை விட, 5 முதல் 10 மடங்கு விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இனிமேல் மிஸ்ட் கால்களுக்கும் கட்டணங்கள் வசூலிக்க பரிசீலனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.