ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 15 ஜூன் 2017 (11:19 IST)

பூங்காவில் இரவில் மாணவியை சீரழித்த காமுகர்கள்!

பூங்காவில் இரவில் மாணவியை சீரழித்த காமுகர்கள்!

தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் தேசிய பூங்கா ஒன்றில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஒரு கும்பல் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
நேற்று இரவு 9 மணியளவில் 12-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி ஒருவர் டெல்லி பேகம்பூர் தேசிய பூங்காவில் தனது நண்பருடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர் அந்த சிறுமியிடம் தவறாக நடந்துள்ளனர்.
 
அதன் பின்னர் அந்த சிறுமியை அந்த நான்கு பேரும் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து வெளியிலோ, காவல்துறைக்கோ தெரிவித்தாலோ மோசமான பின் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என அவர்கள் சிறுமியை மிரட்டி விட்டும் சென்றுள்ளனர்.
 
ஆனாலும் அவர்களது மிரட்டலுக்கு பணியாத அந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் அந்த குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.