1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 30 டிசம்பர் 2017 (11:29 IST)

பிட்காயின் மோகம்? என்ன சொல்கிறது நிதி அமைச்சகம்??

உலகில் பயன்படுத்தும் பணம் போலவே இணையத்திலும் நிறைய பணம் இருக்கிறது. இந்த பணம் நேரடியாக பயன்படமால் இணையத்தில் மட்டுமே பயன்படுகிறது. இதற்கு கிரிப்டோ கரன்சி என்று பெயர். இதில் ஒன்றுதான் பிட்காயின். 
 
சமீப காலமாக பிட்காயினின் மதிப்பு அதிகரித்து வருகிறது. பிட்காயினை பணம் கொடுத்தோ, பங்குகள் கொடுத்தோ வாங்கி கொள்ள முடியும். மேலும் தங்கத்திற்கு பதிலாகவும் இதை மாற்றலாம். இதற்கு சரியான வரி விதிப்பு முறையோ, வங்கி கட்டுப்பாடோ இல்லை. 
 
இந்தியாவில் ஒரு பிட்காயினின் மதிப்பு ரூ.12 லட்சமாகும். இதன் மதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிட்காயின்கள் அல்லது கிரிப்டோ கரென்சிகளை வாங்காதீர் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
மத்திய அரசின் எந்த அமைப்பும் பிட்காயிகள் ஏஜென்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே இதில் முதலீடு செய்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இவை சட்டரீதியாக செல்லுபடியாகும் காயின்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளனர். 
 
சமீபத்தில், பிட்காயினின் உண்மையான மதிப்பு பூஜ்யம்தான் என்று அமெரிக்க ஆய்வாளர் மோர்கன் ஸ்டான்லி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.