திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 20 ஏப்ரல் 2023 (13:49 IST)

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று: தனிமைப்படுதி கொண்டு சிகிச்சை..!

கடந்த சில நாட்களுக்கு முன்னால் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது மத்திய பாதுகாப்பு துறாஇ அமைச்சர் ராஜ்குமார் சிங் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 12,000 க்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் 
 
இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கடந்த சில நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி அவர் அறிவுறுத்தி உள்ளார்
 
Edited by Siva