புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 5 பிப்ரவரி 2022 (10:41 IST)

அம்பானி, அதானி ஆகியோருக்கு கீழே சென்ற பேஸ்புக் நிறுவனரின் சொத்து!

பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 26 சதவீதம் குறைந்த நிலையில் மார்க் ஸூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

கடந்த 3 மாதங்களில் பேஸ்புக் பயனாளிகளின் எண்ணிக்கைக் குறைவு, விளம்பரதாரர்களின் பின்வாங்கல் ஆகிய காரணங்களால் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் பங்குகள் சுமார் 26 சதவிதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளனர். இப்போது பேஸ்புக்கின் சந்தை மதிப்பு பங்குக்கு 237 டாலராக உள்ளது. இதனால் மார்க் ஸூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 85 பில்லியன் டாலராக சரிந்துள்ளதாக போர்ப்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் மார்க்கின் சொத்து மதிப்பு இந்திய தொழிலதிபர்களான அதானி மற்றும் அம்பானி ஆகியோரின் சொத்து மதிப்பை விடக் குறைந்துள்ளது.