1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya
Last Updated : செவ்வாய், 19 ஜூலை 2016 (13:37 IST)

மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதலில் 10 கமாண்டோ வீரர்கள் பலி

மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதலில் 10 கமாண்டோ வீரர்கள் பலி

பீகார் மாநிலத்தில் உள்ள துமரி நலா வனப் பகுதிக்குள் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலால் 10 கமாண்டோ வீரர்கள் பலி, 20-க்கும்  மேற்பட்ட வீரர்கள் படுகாயம்.




சந்தீப் ஜி தலைமையிலான மாவோயிஸ்டு தீவிரவாதிகள் கயா - அவுரங்காபாத் எல்லையில் உள்ள துமரி நலா வனப் பகுதிக்குள் ஊடுருவி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய துணை நிலை ராணுவ வீரர்கள் அந்த வனப் பகுதியை முற்றுகையிட்டு கடந்த இரு நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

அவர்களைப் பிடிக்க மத்திய பாதுகாப்பு படையான சி.ஆர்.பி.எப்-பின் 205வது கோப்ரா கமாண்டோ வீரர் கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் காட்டுக்குள் புகுந்து மாவோயிஸ்டு தீவிர வாதிகளை சுற்றி வளைத்தனர். இதனை அறிந்த மாவோயிஸ்டுகள் ஏ.கே.47 ரக துப் பாக்கிகளால் கமாண்டோ வீரர்களை நோக்கி சுட்டனர். கமாண்டோ வீரர்கள் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இந்த நிலையில் காட்டுக்குள் குறிப்பிட்ட ஒரு பகுதியில் கமாண்டோ வீரர்கள் சிக்கி கொண்டனர். அப்போது 21 கண்ணி வெடிகள் பயங்கரமாக வெடித்தன. அதில் கமாண்டோ வீரர்கள் சிக்கிகொண்டனர். இதில் 10 கமாண்டோ வீரர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 20-க்கும்  மேற்பட்ட வீரர்கள் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சண்டை முடிந்த பிறகு சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடு பட்டனர். 10 கமாண்டோ வீரர்கள் உடல் மீட்கப்பட்டது. காயம் அடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் சிகிச்சைக்காக பாட்னா மற்றும் ராஞ்சி நகர மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.