திருப்பதி வரும் பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்: அறங்காவலர் குழு தலைவர் அறிவிப்பு..!
திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கூறியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் HMPV என்ற வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி விட்டது என்பதும், தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் மொத்தம் ஏழு பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் HMPV வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில், திருப்பதிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்பு நிகழ்ச்சியை காண அதிக பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அறங்காவலர் குழு தலைவர் பி. ஆர். நாயுடு என்பவர், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், HMPV வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Edited by Siva